ஓராண்டில் 796 உபா வழக்குகள் பதிவு: மத்திய அரசு தகவல்

கடந்த 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்காக உபா சட்டத்தின்கீழ் 796 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
ஓராண்டில் 796 உபா வழக்குகள் பதிவு: மத்திய அரசு தகவல்
Published on
Updated on
1 min read

கடந்த 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக உபா சட்டத்தின்கீழ் 796 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் உபா சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்குகள் குறித்த விவரங்களை மாநிலங்களவையில் மத்திய அரசு எழுத்துப்பூர்வ பதிலாக அளித்துள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவுகளின் அடிப்படையில் கடந்த 2020ஆம் ஆண்டு 796 வழக்குகள் உபா சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 80 பேர் மீதான குற்றங்கள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 116 பேர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும், 6482 பேர் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 5027 உபா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் மொத்தம் 212 பேர் மீதான குற்றங்கள் மட்டுமே நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com