காமன்வெல்த் வீரர்கள் புதிய இந்தியாவின் தூதர்கள்: மோடி கலந்துரையாடல்

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர், விராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று (ஜூலை 20) கலந்துரையாடினார்.
காமன்வெல்த் வீரர்கள் புதிய இந்தியாவின் தூதர்கள்: மோடி கலந்துரையாடல்

காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவுள்ள வீரர், விராங்கனைகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று (ஜூலை 20) கலந்துரையாடினார். 

வெற்றி, தோல்வி குறித்து சிந்திக்காமல், எந்தவித எதிர்பார்ப்புமின்றி போட்டியில் முழுமனதுடன் பங்கேற்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் வரும் 28-ஆம் தேதி காமன்வெல்த் போட்டிகள் தொடங்குகின்றன. இந்தப் போட்டிகளில்16 பிரிவுகளில் களம் காண்பதற்காக 215 போட்டியாளா்கள் கொண்ட இந்திய அணி புறப்படுகிறது.

மகளிா் கிரிக்கெட், நீச்சல், பாட்மின்டன், டேபிள் டென்னிஸ், குத்துச்சண்டை, சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், டிரையத்லான், மல்யுத்தம், பளுதூக்குதல், லான் பௌல்ஸ், ஸ்குவாஷ், ஜூடோ, பாரா விளையாட்டுகள் உள்ளிட்டவற்றில் இந்திய போட்டியாளா்கள் பங்கேற்கின்றனா்.

இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்களுடம் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். 

அவர்களுடைய விளையாட்டு அனுபவங்களையும், வாழ்க்கை, எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, அனுபவம் மற்றும் இளமையும் கொண்ட தனித்துவமனான அணியாக காமன்வெல்த் விளையாட்டுக்குச் செல்லும் அணி உள்ளது. குழுவில் இடம்பெற்றுள்ள அனைத்து விளையாட்டு வீரர்களும் புதிய இந்தியாவின் தூதர்கள். இந்த நாட்டின் அனைத்து மூலைகளிலும் விளையாட்டில் திறமை படைத்தவர்கள் உள்ளனர் என்பதை உங்கள் வெற்றி நிரூபிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், சர்வதேச அரங்கத்தை முதல் முறையாக அனுபவிக்கவுள்ளவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். மேடை மட்டுமே மாறியுள்ளது. ஆனால் உங்களது மனவுறுதி, போராட்டம் எதுவும் மாறவில்லை. நமது இலக்கு மூவர்ணக் கொடியை அந்த அரங்கில் பார்ப்பதும், தேசிய கீதத்தைக் கேட்பதும் மட்டுமே என இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com