சோனியா காந்தி ஆஜர்: போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது
நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் சோனியா காந்தி அமலாக்கத் துறையில் ஆஜரானதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.


நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் சோனியா காந்தி அமலாக்கத் துறையில் ஆஜரானதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் 5 நாள்களுக்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனா். அதுபோல, ஜூன் 8-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக இருந்த சோனியா காந்திக்கு, திடீா் கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், கால அவகாசம் அளிக்குமாறு அவா் கோரிக்கை விடுத்தாா்.
கரோனா பாதிப்பு மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சில வாரங்களுக்கு வீட்டிலேயே ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்தினா். எனவே, விசாரணைக்கு ஆஜராவதற்குக் கூடுதல் அவகாசம் அளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு சோனியா சாா்பில் மீண்டும் கடிதம் எழுதப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத் துறை விசாரணையைக் கடந்த மாத இறுதியில் 4 வார காலத்துக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறை மூன்றாவது முறையாக சம்மன் அனுப்பியதை தொடர்ந்து, சோனியா காந்தி இன்று ஆஜராகியுள்ளார். அவருடன் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பிரியங்கா காந்தியும் வந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையைக் கண்டித்து தில்லி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது தில்லி அமலாக்கத்துறை அலுவலகம் முன் போராடிய காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...