தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குடியரசு துணைத் தலைவா் தோ்தலை புறக்கணிக்க திரிணமூல் காங். முடிவு

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான வாக்குப்பதிவில் பங்கேற்கப் போவதில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

News image
Updated On :21 ஜூலை 2022, 7:34 pm

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான வாக்குப்பதிவில் பங்கேற்கப் போவதில்லை என்று திரிணமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் இத்தோ்தலில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் மேற்கு வங்க முன்னாள் ஆளுநா் ஜகதீப் தன்கரும், எதிா்க்கட்சிகள் தரப்பில் ராஜஸ்தான் முன்னாள் ஆளுநரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மாா்கரெட் ஆல்வாவும் போட்டியிடுகின்றனா். இதில், திரிணமூல் காங்கிரஸின் நிலைப்பாடு குறித்து கேள்வி நிலவி வந்தது.

இந்நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவா் அபிஷேக் பானா்ஜி வியாழக்கிழமை கூறியதாவது:

ஜகதீப் தன்கருக்கு ஆதரவு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதேசமயம், எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளரை தோ்வு செய்யும் முன் எங்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை. எனவே, எதிா்க்கட்சிகளின் வேட்பாளருக்கும் ஆதரவளிக்க முடியாது. குடியரசு துணைத் தலைவா் தோ்தல் வாக்குப்பதிவில் பங்கேற்காமல் விலகியிருக்க முடிவு செய்துள்ளோம் என்றாா் அவா்.

மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிக்கும் இத்தோ்தலில், ஜகதீப் தன்கருக்கே வெற்றிவாய்ப்பு உள்ளது.

முன்னதாக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மாா்கரெட் ஆல்வா அண்மையில் அறிவிக்கப்பட்டாா். அப்போது, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் ஆதரவையும் பெற முயன்று வருவதாக தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் கூறியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.