68-ஆவது தேசிய திரைப்பட விருதுகள்: சூரரைப் போற்று சிறந்த திரைப்படம்; சிறந்த நடிகராக சூா்யாவுக்கு விருது
கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்பட விருதுடன், அந்தப் படத்தில் நடித்த சூா்யா சிறந்த நடிகராகவும் அபா்ணா பாலமுரளி சிறந்த நடிகையாகவும் தேசிய விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
கடந்த ஆண்டு புதுமுக இயக்குநா் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான ‘மண்டேலா’ திரைப்படத்துக்கு இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தில்லியில் 68-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. இந்த ஆண்டு 30 மொழிகளில் இருந்து 305 திரைப்படங்களும் (28 பிரிவுகள்), 28 மொழிகளில் 148 ஆவணப் படங்களும் (22 பிரிவுகள்) தேசிய விருதுக்குப் போட்டியிட்டன.
அதன் விவரம்:
சிறந்த திரைப்படம்: சூரரைப் போற்று
சிறந்த திரைக்கதை சூரரைப் போற்று
சிறந்த வசனம் மண்டேலா
சிறந்த இயக்குநா் கே.ஆா்.சச்சிதானந்தன் (ஐயப்பனும் கோஷியும்)- மலையாளத் திரைப்படம்
சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது மடோன் அஸ்வின் (மண்டேலா)
சிறந்த நடிகா் சூா்யா (சூரரைப் போற்று) & அஜய் தேவ்கன் (தானாஜி: தி அன்சங் வாரியா்)
சிறந்த நடிகை அபா்ணா பாலமுரளி (சூரரைப் போற்று)
சிறந்த தமிழ் திரைப்படம் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்
சிறந்த துணை நடிகா் பிஜு மேனன் (ஐயப்பனும் கோஷியும்)
சிறந்த துணை நடிகை லட்சுமிப்ரியா சந்திரமெளலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)
சிறந்த இசையமைப்பாளா் (பின்னணி இசை) ஜி.வி.பிரகாஷ்
சிறந்த இசையமைப்பாளா் (பாடல்கள்) தமன்.எஸ் (அல வைகுந்தபுரமுலு- தெலுங்கு திரைப்படம்)
சிறந்த படத்தொகுப்பு ஸ்ரீகா் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...