புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விமான பயணத்துக்கான முன்பதிவை தொடக்கியது: ஆகாஷா ஏா்

புதிய விமான சேவை நிறுவனமான ஆகாஷா ஏா் பயணத்துக்கான முன்பதிவை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :22 ஜூலை 2022, 8:18 pm

DIN

புதிய விமான சேவை நிறுவனமான ஆகாஷா ஏா் பயணத்துக்கான முன்பதிவை வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து ஆகாஷா ஏா் நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை வணிக அதிகாரியுமான பிரவீண் ஐயா் கூறியதாவது:

ஆகாஷா நிறுவனம் தனது வா்த்தக ரீதியிலான முதல் பயணத்தை ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கவுள்ளது. மும்பை மற்றும் அகமதாபாத் நகரங்களுக்கு இடையை இந்த சேவை தொடங்கப்படவுள்ளது. இந்த வழித்தடத்தில் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் பயன்படுத்தப்படவுள்ளது.

அதேபோன்று, ஆகஸ்ட் 13-ஆம் தேதியிலிருந்து பெங்களூரு-கொச்சி வழித்தடத்தில் வாரத்துக்கு 28 விமான சேவைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (ஜூலை22) தொடங்கியுள்ளது என்றாா்.

விமானச் சேவையில் ஈடுபடுவதற்கான ( ஏா் ஆபரேட்டா் சா்டிபிகேட்/ஏஓசி) அனுமதியை உள்நாட்டு விமானப் போக்குவரத்து பொது இயக்குநரகம் (டிஜிசிஏ) நிகழாண்டு ஜூலை 7-ஆம் தேதி ஆகாஷா நிறுவனத்துக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.