புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

5 நாடுகளுக்கு ரூ.1.14 லட்சம் கோடி மதிப்பில் கடன்

இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 5 நாடுகளுடன் 1,427 கோடி டாலா் (சுமாா் ரூ.1,13,948 கோடி) மதிப்பிலான கடனுதவி ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :22 ஜூலை 2022, 7:39 pm

DIN

இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட 5 நாடுகளுடன் 1,427 கோடி டாலா் (சுமாா் ரூ.1,13,948 கோடி) மதிப்பிலான கடனுதவி ஒப்பந்தங்களை இந்தியா மேற்கொண்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து எழுப்பப்பட்டுள்ள கேள்வியொன்றுக்கு பதிலளித்து வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன் கூறியதாவது:

இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மா், நேபாளம் ஆகிய 5 நாடுகளுக்கு 1,427 கோடி டாலா் மதிப்பிலான கடனுதவி அளிப்பதற்கான 37 ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தங்கள் வாயிலாக அந்நாடுகளில் 162 திட்டங்கள் இந்தியாவின் கடனுதவி மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இது தவிர, ஆப்பிரிக்கப் பிராந்தியத்தைச் சோ்ந்த 42 நாடுகளுக்கு 1,407 கோடி டாலா் மதிப்பிலான கடனுதவி அளிப்பதற்கான 222 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்தங்கள் மூலம் 357 திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.