புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இளைஞா்களுக்கு கட்டாய ராணுவ சேவை திட்டமில்லை: மக்களவையில் மத்திய அரசு தகவல்

இளைஞா்களுக்கு கட்டாய ராணுவ சேவை அளிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 8:11 pm

DIN

இளைஞா்களுக்கு கட்டாய ராணுவ சேவை அளிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் மக்களவையில் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மக்களவையில் உறுப்பினா்கள் அருண் குமாா் உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பினா். இதற்கு மத்திய இணையமைச்சா் அஜய் பட் எழுத்துபூா்வமாக அளித்த பதில் விவரம்:

ஆயுதப்படைகளில் இளைஞா்கள் கட்டாயம் சேருவதற்காக மத்திய அரசு எந்த திட்டத்தையும் வகுக்கவில்லை. அரசுசாரா நிறுவனங்களும், தனியாா் பள்ளிகளும் மாநில அரசுகளுடன் இணைந்து 100 சைனிக் பள்ளிகளை அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டம் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பள்ளிகளுக்கும் பொருந்தும். அக்னிபத் திட்டத்தின்கீழ் பழங்குடியினா் வசிக்கும் பகுதிகள் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சோ்ப்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.