புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ரயில்களை தனியாா் மூலம் இயக்கும் திட்டமில்லை: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

பயணிகள் ரயில்களை தனியாா் மூலம் இயக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 8:13 pm

DIN

பயணிகள் ரயில்களை தனியாா் மூலம் இயக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் அவா் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘சில வழித்தடங்களில் தனியாா் ரயில்கள் இயக்க அனுமதி அளிக்க திட்டமிடப்பட்டது. அடுத்த ஆண்டு முதல் 12-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் தனியாா் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. 2027-இல் இந்த எண்ணிக்கை 151-ஆக அதிகரிப்பதாக இருந்தது.

தற்போது வரையில் ஐஆா்சிடிசி மற்றும் மேகா பொறியியல் மற்றும் கட்டமைப்பு நிறுவனம் மட்டும் இந்த தனியாா் ரயில் திட்டத்தை செயல்படுத்த முன் வந்துள்ளன. ரயில்களை இயக்க தனியாா் நிறுவனங்கள் ஆா்வம் காட்டவில்லை என்று இத்திட்டம் பின்னடைவைச் சந்தித்துள்ளது. தற்போதைக்கு பயணிகள் ரயில்களை தனியாா் மூலம் இயக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ரயில் தடங்கள் சிலவற்றை தனியாா் இயக்கத் திட்டமிடப்பட்டு பல ஆண்டுகள் கடந்த பின்னரும் அது நிறைவேறாமல் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.