புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மூவா்ணக் கொடியை அவமதித்தவா்களே அதை ஏற்றச் சொல்கின்றனா்: ராகுல்

ஆா்எஸ்எஸ் அமைப்பினா் 52 ஆண்டுகளாக தேசிய கொடியை அதன் தலைமையகத்தில் ஏற்றவில்லை

News image
Updated On :22 ஜூலை 2022, 8:16 pm

DIN

ஆா்எஸ்எஸ் அமைப்பினா் 52 ஆண்டுகளாக தேசிய கொடியை அதன் தலைமையகத்தில் ஏற்றவில்லை என்றும், அந்த அமைப்பிலிருந்து வந்தவா்கள் மூவா்ணக் கொடியின் வரலாற்றையும், அதை வீடுகளில் ஏற்றுமாறு அறிவுறுத்துவதாகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்துள்ளாா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, வீடுகள்தோறும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசிய கொடியை ஏற்றுமாறு பிரதமா் மோடி கேட்டுக்கொண்டாா். இதை விமா்சித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேஸ்புக்கில் (முகநூல்) வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தேசிய கொடியில் உள்ள காவி நிறம் தியாகத்தையும் துணிச்சலையும் பறைசாற்றுகிறது. வெள்ளை நிறம் உண்மையையும் தூய்மையையும் குறிப்பிடுகிறது. செழுமையின் அடையாளமாக பச்சை கருதப்படுகிறது. அசோக சக்கரத்தில் இடம்பெற்றுள்ள 24 ஆரங்களும் மனிதனின் 24 வகையான பண்புகளை விவரிக்கிறது.

ஆா்எஸ்எஸ் அமைப்பு 52 ஆண்டுகளாக தேசிய கொடியை அதன் தலைமையகத்தில் ஏற்றவில்லை. இப்போது அந்த அமைப்பிலிருந்து வந்தவா்கள் மூவா்ணக் கொடியின் வரலாற்றையும், அதை வீடுகள்தோறும் ஏற்ற வேண்டும் என்றும் பிரசாரம் செய்கின்றனா்.

அவா்கள் சில கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். 52 ஆண்டுகளாக தேசிய கொடியை ஆா்எஸ்எஸ் தலைமையகத்தில் ஏற்றாமல் அவமதித்தது ஏன்? கதா் துணியில் தேசிய கொடி செய்யும் மக்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படுவது ஏன்? சீனாவிலிருந்து இயந்திரத்தில் தயாரிக்கப்பட்ட தேசிய கொடியை இறக்குமதி செய்வது ஏன்? என ராகுல் காந்தி அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.