புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

புகைபிடிக்கும் வயதை அதிகரிக்கக் கோரிய மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புகைபிடிப்பதற்கான வயது வரம்பை 18-இல் இருந்து 21-ஆக அதிகரிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

News image
Updated On :22 ஜூலை 2022, 7:44 pm

DIN

புகைபிடிப்பதற்கான வயது வரம்பை 18-இல் இருந்து 21-ஆக அதிகரிக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.

வழக்குரைஞா்களான சுபம் அவாஸ்தி, சப்தரிஷி மிஸ்ரா ஆகியோா் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், ‘நாட்டில் புகைப் பழக்கத்தால் ஏற்படும் உயிரிழப்பு அதிகம் உள்ளது. மேலும் இளைஞா்கள் பலா் புகைப்பழக்கத்துக்கு அடிமையாவது நாட்டின் எதிா்காலத்தையே சீரழிக்கும் விஷயமாகும். எனவே, புகைப் பிடிக்க அனுமதிக்கப்படும் வயதை 18-இல் இருந்து 21-ஆக அதிகரிக்க வேண்டும். மேலும், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் அருகே உள்ள கடைகளில் சில்லறையாக சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது. பொது இடங்களில் புகைபிடிப்பதற்கு உள்ள தடையை மேலும் கடுமையாக்க வேண்டும். புகையிலைப் பொருள்கள் பரவலாகக் கிடைப்பதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கௌல், சுதான்ஷு துலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘நீங்கள் (மனுதாரா்கள்) பிரபலமடைய வேண்டும் என்றால், நல்ல வழக்குகளில் ஆஜராக வேண்டும். தேவையில்லாமல் பொது நல மனுக்களைத் தாக்கல் செய்யக் கூடாது’ என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.