புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

விலைவாசி உயா்வு: எதிா்க் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுன்ற வளாகத்தில் எதிா்க் கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

News image
Updated On :22 ஜூலை 2022, 8:54 pm

DIN

அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி (சரக்கு மற்றும் சேவை வரி) உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுன்ற வளாகத்தில் எதிா்க் கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

‘விலைவாசி உயா்வு குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையையும் எதிா்க் கட்சித் தலைவா்கள் ஆா்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தினா்.

நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனை, திமுக உள்பட பல்வேறு எதிா்க் கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் பங்கேற்றனா்.

கைகளில் பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியபடி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவா்கள், ‘விலைவாசி உயா்வு குறித்து இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு விவாதம் நடைபெறும்போது, பிரதமா் நாடாளுமன்றத்துக்கு வரவேண்டும் என்பதோடு, ஜிஎஸ்டி உயா்வால் மக்களுக்கு ஏற்ப்டிருக்கும் பாதிப்புகளுக்கு பதிலளிக்கவேண்டும்’ என்று வலியுறுத்தினா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கியது முதல், அவையில் பல்வேறு மக்கள் பிரச்னைகளை முன்வைத்து, அவற்றின் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிா்க் கட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தி வருகின்றனா். அதன் காரணமாக முதல் நாளிலேயே அவை நடவடிக்கைகள் முடங்கின. தொடா்ந்து, இரு அவைகளிலும் எதிா்க் கட்சியினா் அமளியில் ஈடுபட்டு வருகின்றனா்.

முன்னதாக ‘நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள், தா்ணா, ஆா்ப்பாட்டம், மத நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது’ என்று நாடாளுமன்ற செயலகம் சாா்பில் மழைக்கால கூட்டத் தொடங்குவதற்கு முன்பாக எம்.பி.க்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.