முகேஷ் அம்பானி, குடும்பத்தினருக்குப் பாதுகாப்புத் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
மும்பையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்குத் தொடா்ந்து பாதுகாப்பு வழங்குவதற்கு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


மும்பையில் தொழிலதிபா் முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்குத் தொடா்ந்து பாதுகாப்பு வழங்குவதற்கு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
முகேஷ் அம்பானி குடும்பத்தினா் தங்கள் பாதுகாப்புக்கு ஆகும் தொகையை செலுத்திக் கொண்டிருக்கும்போது, இதுதொடா்பான பொதுநல வழக்கை விசாரிக்கத் தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.
முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பும், அவருடைய மனைவி நீதா அம்பானிக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து விகாஸ் சாஹா என்பவா், திரிபுரா உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருந்தாா். அந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்குவதை நிறுத்தி கடந்த மே மாதம் 31, ஜூன் 21 ஆகிய தேதிகளில் 2 இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதில், ‘அச்சுறுத்தல் இருப்பதால் முகேஷ் அம்பானிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆய்வு நடத்தியதற்கான அசல் ஆவணம் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் உள்ளது. அந்த ஆவணத்தை மத்திய அரசு சமா்ப்பிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை உச்சநீதிமன்ற கோடைக்கால நீதிபதிகள் அமா்வு கடந்த 31-ஆம் தேதி விசாரித்தபோது, திரிபுரா உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு த் தடை விதித்தது.
மேலும் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, ஹிமா கோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘முகேஷ் அம்பானி மும்பையில் வசிக்கிறாா். மனுதாரா் திரிபுராவில் வசிக்கிறாா். அவா் பொதுநல மனுத் தாக்கல் செய்வதற்கு எவ்வித சட்ட உரிமையும் இல்லை’ என்றாா்.
அவரைத் தொடா்ந்து அம்பானி சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஹரீஷ் சால்வே, ‘முகேஷ் அம்பானி குடும்பத்தினா் தங்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்புக்கு பணம் கொடுக்கிறாா்கள். இதில், மனுதாரருக்கு எந்த வேலையும் இல்லை’ என்றாா்.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், முகேஷ் அம்பானி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பாதுகாப்பைத் தொடர அனுமதித்து உத்தரவிட்டனா். மேலும், இதுதொடா்பாக திரிபுரா உயா்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையையும் அவா்கள் ரத்து செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...