கைதான பார்த்தா சட்டர்ஜியின் போன் அழைப்புக்கு பதில் அளிக்காத மம்தா!

மேற்கு வங்க அமைச்சர் பாா்த்தா சட்டா்ஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை 4 முறை தொலைபேசி மூலமாக அழைத்துள்ளார்.
கைதான பார்த்தா சட்டர்ஜியின் போன் அழைப்புக்கு பதில் அளிக்காத மம்தா!

மேற்கு வங்க அமைச்சர் பாா்த்தா சட்டா்ஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை 4 முறை தொலைபேசி மூலமாக அழைத்துள்ளார். ஆனால், மம்தா பதில் அளிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத ஊழியா்கள் நியமனத்தில் முறைகேடு புகாா் தொடா்பாக அந்த மாநில அமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பாா்த்தா சட்டா்ஜியை அமலாக்கத் துறை சனிக்கிழமை கைது செய்தது. அவரது உதவியாளரும் விளம்பர நடிகையுமான அா்பிதா முகா்ஜியும் கைது செய்யப்பட்டாா்.

தற்போது தொழில், வா்த்தக துறை அமைச்சராக உள்ள சட்டா்ஜி, முறைகேடு நடந்ததாக கூறப்படும் கடந்த 2014 முதல் 2021-ஆம் ஆண்டு வரை கல்வித் துறை அமைச்சராக இருந்தாா்.

அமலாக்கத்துறை காவலில் உள்ள அவர் உடல்நலக்குறைவு காரணமாக முதலில் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பார்த்தா சட்டர்ஜி, மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியை தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ள 4 முறை முயன்றதாகவும் ஆனால், மம்தா தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதை பார்த்தா சட்டர்ஜியும் சனிக்கிழமை காலை செய்தியாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார். 

ஆனால், அமலாக்கத்துறை கைது செய்த உடனே, சம்மந்தப்பட்டவரின் மொபைல் போனை வாங்கிவிடும் பட்சத்தில் அவர் எவ்வாறு போனை பயன்படுத்தியிருக்க முடியும்? என்று அந்த மாநில அமைச்சரும் திரிணமூல் கட்சியின் மற்றொரு தலைவருமான பிர்ஹத் ஹக்கிம் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஆனால், கைது செய்யப்பட்ட நபர் தங்களது குடும்பத்தினர் அல்லது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க அனுமதிக்கப்படும் என அமலாக்கத்துறை கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com