வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட்டார் ஆந்திர முதல்வர்

ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று பார்வையிட்டார். 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட்டார் ஆந்திர முதல்வர்
Published on
Updated on
1 min read

ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று பார்வையிட்டார். 

ஆந்திரத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், முதல்வர் ரெட்டி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். 

அதன்படி, இன்று கோனசீமா மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ப.கன்னவரம் தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு படகில் சென்று, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார். மேலும் நிவாரண திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்தார். 

முன்னதாக, கோதாவரி வெள்ளம் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஜூலை 16ஆம் தேதி முதல்வர் ரெட்டி ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் பொருட்கள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். மேலும் உயிர்ச் சேதம் ஏற்படாமல் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு மணி நேரமும் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், மேற்கு கோதாவரி மற்றும் கோனசீமா மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களை அச்சுறுத்தி வரும் நிலையில் ஆந்திரத்தின் சில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 

நிலைமையைத் தீவிரமாக கண்காணிக்கக் காவல் துறையும், மாவட்ட ஆட்சியரும் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.