குரங்கு அம்மை அறிகுறியுடன் தெலங்கானா வந்தவர்: கிடைத்ததோ நல்ல செய்தி!

குரங்கு அம்மை அறிகுறியுடன் தெலங்கானா வந்தவர்: கிடைத்ததோ நல்ல செய்தி!

தெலங்கானாவில் ஜூலை 24 அன்று குவைத்தில் இருந்து குரங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வந்தவருக்கு மருத்துவமனை சோதனையில் நல்ல செய்தி கிடைத்துள்ளது. 
Published on

தெலங்கானாவில் ஜூலை 24 அன்று குவைத்தில் இருந்து குரங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் வந்தவருக்கு மருத்துவமனை சோதனையில் நல்ல செய்தி கிடைத்துள்ளது. 

குவைத்தில் இருந்து தெலங்கானா வந்தவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறிகள் தென்பட்டதால் அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவரது மாதிரிகள் புணேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. அவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். 

இந்நிலையில், குரங்கு அம்மை பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட மாதிரிகளில் அவரது குரங்கு காய்ச்சலுக்கான தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இதுவரை நான்கு பேர் குரங்கு காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் மூவர் கேரள மாநிலத்தையும், ஒருவர் தில்லியையும் சேர்ந்தவர் ஆவர். 

குரங்கு காய்ச்சலை சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது. மக்கள் தேவையின்றி பீதியடையத் தேவையில்லை என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் பி.கே.பால் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, உலக சுகாதார நிறுவனம் சனிக்கிழமையன்று குரங்கு காய்ச்சலை உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com