முன்னாள் முதல்வருக்கு வாழ்த்துச் சொன்ன இந்நாள் முதல்வர்: அது மட்டுமல்ல..

மகாராஷ்டிரய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மாநிலத்தின் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வருக்கு வாழ்த்துச் சொன்ன இந்நாள் முதல்வர்: அது மட்டுமல்ல..
முன்னாள் முதல்வருக்கு வாழ்த்துச் சொன்ன இந்நாள் முதல்வர்: அது மட்டுமல்ல..


மும்பை: மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மாநிலத்தின் முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

பிறந்தநாள் வாழ்த்துச் சொன்னதோடு, மட்டுமல்லாமல், அதில் முன்னாள் முதல்வர் என்றும் குறிப்பிட்டிருப்பது பல அரசியல் நோக்கர்களையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

ஏக்நாத் ஷிண்டே தனது டிவிட்டர் பக்கத்தில் மராத்தி மொழியில் வெளியிட்டிருக்கும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியில், பிறந்தநாள் வாழ்த்துகள் மாண்புமிகு ஸ்ரீ உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிரத்தின் முன்னாள் முதல்வர். நீங்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்வை வாழ ஜெகதாம்பிகை தாயின் கால்களைத் தொட்டு வணங்குகிறேன்  என்று குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சியைக் கலைக்க பல அரசியல் நாடகங்களை அரங்கேற்றி, பாஜகவுடன் சேர்ந்து கொண்டு புதிய ஆட்சியை ஏற்படுத்தி, முதல்வராகவும் பதவியேற்றுக் கொண்டார் ஏக்நாத் ஷிண்டே. அதோடு நில்லாமல் தாங்கள் தான் உண்மையான சிவ சேனை என்று உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளார். 

இதனால் இரு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சிவசேனை கட்சியின் சின்னத்துக்கு உத்தவ் தாக்கரே தலைமையிலான அணியினரும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியினரும் உரிமை கோரும் நிலையில், இருதரப்பும் ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் ஆவணங்களைத் தாக்கல் செய்ய தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சிவசேனையில் ஏற்பட்ட பிளவால், மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு கடந்த மாதம் கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக ஆதரவுடன் சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா்.

இதனிடையே, சிவசேனையின் ‘வில் அம்பு’ சின்னத்தை தங்களது தரப்புக்கு ஒதுக்கக் கோரி, தோ்தல் ஆணையத்துக்கு ஷிண்டே தரப்பினா் அண்மையில் கடிதம் எழுதினா். அதேசமயம், தங்களது வாதங்களைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்று கோரி, தோ்தல் ஆணையத்துக்கு உத்தவ் தரப்பும் கடிதம் அனுப்பியது.

இந்நிலையில், தோ்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: இருதரப்பினரும் தங்களது கோரிக்கைக்கு வலுசோ்க்கும் ஆவணங்கள், குறிப்பாக எம்எல்ஏ-க்கள் மற்றும் கட்சியின் அமைப்புரீதியிலான அணிகளின் ஆதரவுக் கடிதங்களைப் பெற்று, ஆகஸ்ட் 8-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது முதல்கட்ட நடவடிக்கைதான். அடுத்தகட்டமாக ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என்று தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

மகாராஷ்டிர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 வாரங்களுக்குள் தோ்தலை அறிவிக்குமாறு அந்த மாநில தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டிருந்தது. இந்தச் சூழலில், சிவசேனை சின்னம் விவகாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னதாக, சிவசேனை மக்களவை உறுப்பினா்கள் 18 பேரில், 12 போ் தனி அணியாக செயல்பட முடிவு செய்தனா். தங்களது தரப்பைச் சோ்ந்த ராகுல் ஷெவாலேவை, சிவசேனை மக்களவைக் குழு தலைவராக அங்கீகரிக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவரிடம் கடந்த செவ்வாய்க்கிழமை கடிதம் அளித்தனா். அவா்களது கோரிக்கையை மக்களவைத் தலைவா் ஏற்றுக் கொண்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com