மகாராஷ்டிரத்தில் பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பொருள்கள் வாங்குவதற்கும், விற்பதற்கும் இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களை 2022-ஆம் ஆண்டுக்குள் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா். இதைத்தொடா்ந்து, நெகிழி கழிவு மேலாண்மை திருத்த விதிமுறைகளை கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்தது.
அதன்படி, ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விநியோகித்தல், விற்பனை, பயன்பாட்டிற்கு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிக்கலாம்: அறிவியல் ஆயிரம்: புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் புதிய கண்டுபிடிப்பு
ஆனால், பல இடங்களில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய தட்டுகள், கோப்பைகள், கொள்கலன்கள் மற்றும் பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பொருள்கள் சேர்த்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர்.
எனவே, பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட பொருள்களுக்கும், பிளாஸ் பூச்சு சேர்க்கப்பட்ட பொருள்களும் இன்று முதல் விற்பனை செய்வதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூட்டிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் 2018-ம் ஆண்டு முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தகைய பொருள்களின் தன்மை குறித்த தெளிவின்மையை நீக்க இந்த புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

50 ஆண்டுகால தோ்தல் வரலாற்றில் மூன்றாம் முறையாக 20 சதவீதமாக குறைந்த அதிமுக வாக்கு வங்கி!
20%-ஆக குறைந்த அதிமுக வாக்கு வங்கி! 50 ஆண்டுகால தோ்தல் வரலாற்றில் மூன்றாம் முறை

இன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!

வாசுதேவநல்லூா் தொகுதியில் திமுக வெற்றி
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


