ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அடுத்த 8 வாரங்களுக்கு 50 சதவிகித விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு சொந்தமான விமானங்களில் அடிக்கடி கோளாறுகள் ஏற்படுவதாக எழுந்த புகாரத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளை விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வழங்கிய காரணங்களுக்கான அறிக்கை அடிப்படையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூலை 5ஆம் தேதி வரை ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதனால் அடுத்த 8 வாரங்களுக்கு 50 சதவிகித விமானங்களை மட்டுமே இயக்க அறிவுறுத்தப்படுகிறது.
விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் பாதுகாப்பு வழங்குவதற்கும் போதுமான தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார அம்சங்கள் உள்ளதை விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு உறுதி செய்ய வேண்டும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 18 நாள்களில் மட்டும் 8 முறை கோளாறு காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

