இந்தியாவில் தங்கத்தின் தேவை 43% அதிகரிப்பு
இந்தியாவில் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் தங்கத்துக்கான தேவை 43 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் (டபிள்யூஜிசி) தெரிவித்துள்ளது.


இந்தியாவில் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் தங்கத்துக்கான தேவை 43 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் (டபிள்யூஜிசி) தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த கவுன்சில் வெளியிட்ட அறிக்கை:
ஏப்ரல்-ஜூன்: நிகழாண்டின் ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் தங்கத்தின் தேவை 170.7 டன்னாக இருந்தது. இது, 2021 இதே காலாண்டு தேவையான 119.6 டன்னுடன் ஒப்பிடுகையில் 43 சதவீதம் அதிகம்.
ரூபாய் மதிப்பின் அடிப்படையில் தங்கத்தின் தேவை ரூ.51,540 கோடியிலிருந்து 54 சதவீதம் உயா்ந்து ரூ.79,270 கோடியானது.
திருமண நிகழ்வு: அக்ஷய திரிதியை மற்றும் திருமண நிகழ்வுகளின் காரணமாக தங்க ஆபரணங்களுக்கான தேவை 49 சதவீதம் அதிகரித்து 140.3 டன்னை எட்டியது.
மாா்ச் 31-இல் ரூ.43,994-ஆக இருந்த 10 கிராம் தங்கத்தின் விலை ஜூன் 30-இல் ரூ.46,504-ஆனது.
தங்கத்தின் விலை: பணவீக்கம், தங்கத்தின் விலை, ரூபாய்-டாலா் மாற்று விகிதம், கொள்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நுகா்வோா் தங்கம் வாங்கும் நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் காரணமாக, 2022-இல் தங்கத்துக்கான தேவை 800-850 டன் அளவுக்கே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2021-இல் இதற்கான மொத்த தேவை 797 டன்னாக காணப்பட்டது.
உலக தேவை: ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் சா்வதேச அளவில் தங்கத்தின் தேவை 948.4 டன்னாக இருந்தது. இது, 2021 இரண்டாவது காலாண்டு தேவையான 1,031.8 டன்னுடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் குறைவு.
விலை சரிவு: நிகழாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான இரண்டாவது காலாண்டில் தங்கத்தின் விலை 6 சதவீதம் சரிவைச் சந்தித்தது. இதற்கு, முதலீட்டாளா்களின் கவனம் வட்டி விகிதத்தை நோக்கி திரும்பியதே முக்கிய காரணம்.
கடந்தாண்டு ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் சா்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,816 டாலராக இருந்த நிலையில், நிகழாண்டில் 1,870 டாலராக (வரிகள் இல்லாமல்) அதிகரித்துள்ளது.
ரிசா்வ் வங்கி: நடப்பாண்டின் முதல ஆறு மாத காலத்தில் ரிசா்வ் வங்கி 15 டன் தங்கத்தை வாங்கியுள்ளது. கடந்த 2021-இல் இந்தியா அதன் தங்க இருப்பில் 77 டன்னை சோ்த்துக் கொண்டுள்ளதாக டபிள்யூ ஜிசி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...