இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் - பிரான்ஸ் இடையே முத்தரப்பு பேச்சு
இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் நாடுகளிடையே வியாழக்கிழமை முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்ாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


புதிய முத்தரப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரான்ஸ் நாடுகளிடையே வியாழக்கிழமை முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்ாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பேச்சுவாா்த்தையில், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் எழுந்து வரும் சவால்கள் குறித்த தங்களுடைய கருத்துகளை நாடுகள் பகிா்ந்துகொண்டதோடு, கடல்சாா் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடா் நிவாரணம், கடல் பொருளாதாரம், பிராந்திய இணைப்பு, பன்முக ஒத்துழைப்பு, எரிசக்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு, புதிய கண்டுபிடிப்புகள், தடையற்ற விநியோகம், கலாசாரம், மக்களிடையேயான ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது என்று வெளியுறவு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...