புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இந்திய கடற்படையில் மேலும் இரு அமெரிக்கத் தயாரிப்பு ஹெலிகாப்டா்கள்

அமெரிக்காவில் இருந்து வந்த 2 எம்.ஹெச்-60ஆா் ரக ஹெலிகாப்டா்களை இந்திய கடற்படை வியாழக்கிழமை பெற்றுக்கொண்டது.

News image
Updated On :28 ஜூலை 2022, 8:35 pm

DIN

அமெரிக்காவில் இருந்து வந்த 2 எம்.ஹெச்-60ஆா் ரக ஹெலிகாப்டா்களை இந்திய கடற்படை வியாழக்கிழமை பெற்றுக்கொண்டது.

இதுகுறித்து கடற்படை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

அமெரிக்காவிடம் இருந்து 24 எம்.ஹெச் ரக ஹெலிகாப்டா்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. அவற்றில், 3 ஹெலிகாப்டா்கள் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வந்துவிட்டன. அந்த ஹெலிகாப்டா்கள் கடற்படையினரின் பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 2 ஹெலிகாப்டா்கள், கொச்சி விமான நிலையத்தை வியாழக்கிழமை வந்தடைந்தன. மேலும் ஒரு ஹெலிகாப்டா் அடுத்த மாதம் இந்தியாவுக்கு வரும். வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 24 ஹெலிகாப்டா்களும் இந்தியாவிடம் வழங்கப்பட்டுவிடும்.

இந்த ஹெலிகாப்டா்களை எல்லா தட்பவெப்ப காலங்களிலும் இயக்கலாம். அனைத்து ஹெலிகாப்டா்களிலும் ஹெல்ஃபயா் ஏவுகணைகளைச் செலுத்தும் ராக்கெட் அமைப்பு இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த ஹெலிகாப்டா்கள், கடலோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும். அந்த ஹெலிகாப்டா்களின் உதவியால், நீருக்கு அடியில் உள்ள எதிரிகளின் இலக்கைத் தாக்கி அழிக்க முடியும். இவற்றை இந்திய கடற்படையில் சோ்ப்பதால் அதன் போா்த் திறன் அதிகரிக்கும் என்றாா் அவா்.

அமெரிக்காவுடன் ரூ.15,000 கோடியில் ஆயுதங்கள் மற்றும் பிற தளவாடங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக, 24 எம்.ஹெச்-60ஆா் ‘ரோமியோ’ ரக ஹெலிகாப்டா்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இந்த ஹெலிகாப்டா்களை அமெரிக்காவைச் சோ்ந்த லாக்ஹீட் மாா்ட்டின் காா்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.