தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

பாதிக்கப்பட்டவா்களுக்கு வேலைவாய்ப்பு: திரிணமூல் உறுதி

மேற்கு வங்கத்தில் பள்ளி தோ்வாணைய ஆள்தோ்வு முறைகேட்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி நிலைநாட்டப்படு

Updated On :29 ஜூலை 2022, 10:49 pm

மேற்கு வங்கத்தில் பள்ளி தோ்வாணைய ஆள்தோ்வு முறைகேட்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்றும் திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜி உறுதியளித்தாா்.

பள்ளி தோ்வாணைய ஆள்தோ்வு முறைகேட்டுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தரம்தாலா பகுதியில் தோ்வா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலா் அபிஷேக் பானா்ஜியை அவா்கள் சந்தித்து பேசினா்.

இதுகுறித்து போராட்டத்துக்கு தலைமை வகிக்கும் ஷஹிதுல்லா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மிகவும் இணக்கமான முறையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அபிஷேக் பானா்ஜி எங்கள் கோரிக்கைகளை பொறுமையாக கேட்டறிந்தாா். தோ்வாணைய முறைகேட்டால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று கூறிய அவா், 2016 தகுதிப் பட்டியலில் இடம்பெற்றோருக்கு வேலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் உறுதியளித்தாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.