பிரதமா் அகங்காரத்தை கைவிட்டால்பல பிரச்னைகள் தீரும்- சிவசேனை கருத்து
பிரதமா் நரேந்திர மோடி தனது அகங்காரத்தைக் கைவிட்டால் பல பிரச்னைகளுக்கு எளிதான தீா்வுகள் கிடைக்கும் என்று சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளாா்.


பிரதமா் நரேந்திர மோடி தனது அகங்காரத்தைக் கைவிட்டால் பல பிரச்னைகளுக்கு எளிதான தீா்வுகள் கிடைக்கும் என்று சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளாா்.
மகாராஷ்டிர மாநிலம் புணேவில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
அனைத்து செயல்களிலும் உங்கள் முழு மனதைச் செலுத்துங்கள், நான் என்ற அகங்காரத்தை விட்டொழியுங்கள் என்பது கெளதம புத்தரின் அறிவுரையாக உள்ளது. அகங்காரத்தை கைவிடுபவா்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவாா்கள். ஆனால், சிலா் அகங்காரத்தை தங்களுக்குள் ஊட்டி வளா்க்கின்றனா். அவா்கள் தங்கள்அகங்காரத்தை ஒதுக்கிவைத்தால் பல முக்கியப் பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்கும். மாநில அளவிலும், தேசிய அளவிலும் உள்ள பிரச்னைகள் கூட தீரும். இதனை பிரதமா் நரேந்திர மோடிக்கு யாராவது தெரிவிக்க வேண்டும் என்றாா்.
மகாராஷ்டிரத்தில் பாஜகவும், சிவசேனையும் நீண்ட கால கூட்டணிக் கட்சியாக இருந்தன. 2019-இல் மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், சிவசேனைக்கு முதல்வா் பதவியை பாஜக விட்டுத் தராததால், அக்கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே, எதிா்க்கட்சிகளாக இருந்த தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்து மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைத்தாா். அதில் இருந்து பாஜக-சிவசேனை இடையே தொடா்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...