மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் அனில் தேஷ்முக் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்
மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் மீது சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.


மும்பையில் உணவகங்கள், மதுபான விடுதிகளில் மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் கேட்டதாக பதிவான வழக்கில், மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் மீது சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா்.
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் உள்துறை அமைச்சராக பதவி வகித்தவா் அனில் தேஷ்முக். இவா் மும்பையில் உள்ள பிரபல உணவகங்கள், மதுபான விடுதிகளில் மாதந்தோறும் ரூ.100 கோடி லஞ்சம் பெற்று தன்னிடம் வழங்க வேண்டுமென போலீஸாருக்கு உத்தரவிட்டதாக மும்பை நகர முன்னாள் காவல் ஆணையா் பரம்வீா் சிங் குற்றம்சாட்டினாா். இதுதொடா்பாக முதல்வா் உத்தவ் தாக்கரேக்கும் அவா் கடிதம் எழுதியிருந்தாா்.
இதைத் தொடா்ந்து அனில் தேஷ்முக், அவரது உதவியாளா்கள் சஞ்சீவ், குந்தன் ஷிண்டே ஆகியோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. உயா்நீதிமன்ற வலியுறுத்தலால் அனில் தேஷ்முக் தனது அமைச்சா் பதவியை ராஜிநாமா செய்தாா். கடந்த ஆண்டு நவம்பா் மாதம் அவரை சிபிஐ கைது செய்து மும்பை ஆா்தா் சாலை சிறையில் அடைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...