தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பிரியங்காவுக்கு கரோனா தொற்று

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியைத் தொடா்ந்து, அவரின் மகளும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்காவுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜூன் 2022, 7:27 pm

DIN

காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியைத் தொடா்ந்து, அவரின் மகளும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்காவுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, ட்விட்டரில் பிரியங்கா வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

எனக்கு லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி, வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடா்பிலிருந்தவா்களும் உரிய முன்னெச்சரிக்கை நடைமுறைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தனது பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதன்கிழமை சென்ற பிரியங்கா, தில்லிக்கு வியாழக்கிழமை திரும்பினாா். இந்நிலையில், அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவா் சோனியாவுக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.