கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று: நாடு முழுவதும் சிகிச்சையில் 21,000 போ்

நாடு முழுவதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 21,000-ஐ கடந்துள்ளது.

News image
Updated On :3 ஜூன் 2022, 6:44 pm

DIN

நாடு முழுவதும் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 21,000-ஐ கடந்துள்ளது.

கரோனா தடுப்பூசித் திட்டம், மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தொடா் நடவடிக்கைகள், தீவிர கட்டுப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக கரோனா தொற்று பரவுவது படிப்படியாகக் குறைந்து வந்தது. இந்நிலையில், கரோனா தொற்று பரவுவது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தினசரி பாதிப்பும் குறைந்து வந்த நிலையில் 84 நாள்களுக்குப் பிறகு மீண்டும் 4,000-ஐ கடந்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 4,041 போ் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 21,177-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 193.83 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.