துருக்கி நிராகரித்த கோதுமையை கைமாற்றிவிட்ட இந்தியா

இந்திய கோதுமையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி துருக்கி நிராகரித்த 56 ஆயிரம் டன் கோதுமையை, இந்தியா எகிப்து நாட்டுக்கு விற்பனை செய்துள்ளது.
துருக்கி நிராகரித்த கோதுமையை கைமாற்றிவிட்ட இந்தியா
துருக்கி நிராகரித்த கோதுமையை கைமாற்றிவிட்ட இந்தியா
Published on
Updated on
1 min read

இந்திய கோதுமையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி துருக்கி நிராகரித்த 56 ஆயிரம் டன் கோதுமையை, இந்தியா எகிப்து நாட்டுக்கு விற்பனை செய்துள்ளது.

உலகிலேயே அதிகளவில் கோதுமையை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றான எகிப்து, கோதுமை ஏற்றுமதி செய்யும் புதிய நாடுகளை தேடி வரும் நிலையில், இந்திய கோதுமை எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்தியாவில் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட மே 13ஆம் தேதிக்கு முன்பு, சரக்குப் பெட்டகத்தில் ஏற்றப்பட்ட 56 ஆயிரம் டன் கோதுமையும், எகிப்தில் இறக்குமதி செய்யப்பட்டது. ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக கோதுமை ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, ரொட்டிகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் எகிப்து நாட்டுக்கு இந்த கோதுமை வரப்பிரசாதமாக மாறியுள்ளது.

முன்னதாக, இந்திய கோதுமையின் தரம் குறைவாக இருப்பதாக கூறி துருக்கி அதனை நிராகரித்துள்ள விவகாரம் குறித்து மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதாக உணவுத் துறை செயலா் சுதான்ஷு பாண்டே வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

துருக்கி நாட்டுக்கு ஐடிசி நிறுவனம் 60,000 டன் கோதுமையை ஏற்றுமதி செய்தது. இந்த நிலையில், கோதுமை தரமற்றதாக இருப்பதாகக் கூறி துருக்கி அதனை நிராகரித்தது. இந்த விவகாரத்தில், ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு இருப்பதாக சம்பந்தப்பட்ட ஐடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்திய கோதுமை நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை தெரிவிக்குமாறு மத்திய அரசு துருக்கியிடம் கோரியுள்ளது.

இதனிடையே, மே 13-இல் ஏற்றுமதிக்கு தடை விதித்த பிறகு, ஆறு நாடுகள் இந்திய கோதுமையை இறக்குமதி செய்வதற்கு கோரிக்கை விடுத்துள்ளன. அது குறித்து பரிசீலித்து முடிவெடுக்க மத்திய அரசு, குழு ஒன்றை அமைத்திருந்த நிலையில், துருக்கி நாட்டுக்கு அனுப்பிய கோதுமை, எகிப்து நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com