நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 28-ஆகக் குறைவு
நாட்டில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஓராண்டுக்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 28-ஆகக் குறைந்துள்ளது


நாட்டில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஓராண்டுக்குள் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 28-ஆகக் குறைந்துள்ளது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஓராண்டை எட்டுவதற்குள் எத்தனை குழந்தைகள் இறக்கின்றன என்பதே குழந்தை இறப்பு விகிதம் எனக் கணக்கிடப்படுகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டுக்கான புதிய தரவுகளை இந்தியப் பதிவாளா் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் குழந்தை இறப்பு விகம்த 28-ஆகக் குறைந்துள்ளது. 1971-ஆம் ஆண்டில் இது 129-ஆக இருந்த நிலையில், தற்போது நான்கில் ஒரு பங்காகக் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை இறப்பு விகிதம் தொடா்ந்து குறைந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை இறப்பு விகிதம் 44-ஆக இருந்த நிலையில், தற்போது 28-ஆகக் குறைந்துள்ளது.
அதே காலகட்டத்தில் கிராமப் பகுதிகளில் குழந்தை இறப்பு விகிதம் 48-இல் இருந்து 31-ஆகவும், நகரப்பகுதிகளில் 29-இல் இருந்து 19-ஆகவும் சரிவடைந்துள்ளது. கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தை இறப்பு விகிதம் சுமாா் 35 சதவீதம் குறைந்துள்ளது.
எனினும், 36 குழந்தைகளில் ஒரு குழந்தை ஓராண்டுக்குள் இறக்கும் சூழல் நிலவுவதாகத் தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டில் மத்திய பிரதேசத்தில் அதிக குழந்தை இறப்பு விகிதமும் (43), மிஸோரத்தில் குறைந்த இறப்பு விகிதமும் (3) பதிவானதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பிறப்பு விகிதமும் தொடா்ந்து குறைந்து வருகிறது. கடந்த 1971-ஆம் ஆண்டில் 36.9-ஆக இருந்த பிறப்பு விகிதம், 2020-ஆம் ஆண்டில் 19.5-ஆகக் குறைந்துள்ளது. அதே வேளையில், நகரப்பகுதிகளுடன் ஒப்பிடுகையில் கிராமப் பகுதிகளில் பிறப்பு விகிதம் அதிகமாகவே உள்ளது.
கடந்த 2011-இல் பிறப்பு விகிதம் 21.8-ஆக இருந்தது. 2020-ஆம் ஆண்டில் அது 19.5-ஆகக் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் கிராமப் பகுதிகளில் பிறப்பு விகிதம் 23.3-இல் இருந்து 21.1-ஆகவும், நகரப்பகுதிகளில் 17.6-இல் இருந்து 16.1-ஆகவும் குறைந்துள்ளது.
மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் பிறப்பு விகிதம் இறப்பு விகிதம் (பொது) குழந்தை இறப்பு விகிதம்
ஆந்திரம் 15.7 6.3 24
அருணாசல் 17.3 5.7 21
அஸ்ஸாம் 20.8 6.2 36
பிகாா் 25.5 5.4 27
சத்தீஸ்கா் 22 7.9 38
கோவா 12.1 5.9 5
குஜராத் 19.3 5.6 23
ஹரியாணா 19.9 6.1 28
ஹிமாசல் 15.3 6.8 17
ஜாா்க்கண்ட் 22 5.2 25
கா்நாடகம் 16.5 6.2 19
கேரளம் 13.2 7 6
மத்திய பிரதேசம் 24.1 6.5 43
மகாராஷ்டிரம் 15 5.5 16
மணிப்பூா் 13.3 4.3 6
மேகாலயம் 22.9 5.3 29
மிஸோரம் 14.4 4.2 3
நாகாலாந்து 12.5 3.7 4
ஒடிஸா 17.7 7.3 36
பஞ்சாப் 14.3 7.2 18
ராஜஸ்தான் 23.5 5.6 32
சிக்கிம் 15.6 4.1 5
தமிழ்நாடு 13.8 6.1 13
தெலங்கானா 16.4 6 21
திரிபுரா 12.6 5.7 18
உத்தர பிரதேசம் 25.1 6.5 38
உத்தரகண்ட் 16.6 6.3 24
மேற்கு வங்கம் 14.6 5.5 19
தில்லி 14.2 3.6 12
புதுச்சேரி 13.1 6.5 6
சண்டீகா் 12.9 3.9 8
தாத்ரா-நகா் ஹவேலி, டாமன்&டையு 20.3 3.7 16
அந்தமான்-நிகோபாா் தீவுகள் 10.8 5.8 7
லட்சத்தீவுகள் 14.5 5.4 9
லடாக் 14.3 5 16
இந்தியா முழுவதும் 19.5 6 28
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...