மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

உ.பி. அவலம்: பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததற்காக அடித்து உதைத்த மாமியார்

பெண் குழந்தையைப் பெற்றெடுத்தக் காரணத்தால், ஒரு பெண்ணை அவரது மாமியார் உள்ளிட்டோர் தெருவில் அடித்து உதைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

News image

உ.பி. அவலம்: பெண் குழந்தையைப் பெற்றெடுத்ததற்காக அடித்து உதைத்த மாமியார்

Updated On :4 ஜூன் 2022, 11:20 am

மஹோபா: பெண் குழந்தையைப் பெற்றெடுத்தக் காரணத்தால், ஒரு பெண்ணை அவரது மாமியார் உள்ளிட்டோர் தெருவில் அடித்து உதைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதனால், மகனைப் பெற்றுக் கொடுக்கவில்லை என்று கூறி அவரது கணவரும், மாமியாரும் தொடர்ந்து அவரை துன்புறுத்தி வந்துள்ளனர்.

இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு மகன் பிறக்கவில்லை என்று கூறி எனது கணவரும் மாமியாரும் தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்தனர். எனக்கு இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால், அவர்களது கொடுமை அதிகரித்துவிட்டது என்கிறார்.

உணவு கொடுக்காமல் மாமியார் துன்புறுத்தி வந்ததாகவும் அவர் கூறுகிறார். பெண் குழந்தையைப் பெற்றெடுத்த காரணத்தால், அப்பெண்ணை அடித்து உதைக்கும் காட்சியும், அதில், அவர் தன்னை தாக்குபவர்களை அடிக்க வேண்டாம் என்று கெஞ்சுவதும் பதிவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.