சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பஞ்சாபில் பட்டப்பகலில் வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞர் (விடியோ)

பஞ்சாபில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சிசிடிவி விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :4 ஜூன் 2022, 1:52 pm

DIN

பஞ்சாபில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சிசிடிவி விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூலி வேலை செய்து வரும் தேஷ்ராஜ் (26) என்ற இளைஞரை 6 பேர் கொண்ட கும்பல் நேற்று (ஜூன் 3)  பஞ்சாபின் மோகா மாவட்டத்தின் சந்தைப் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருப்பதாவது,  ஒரு கும்பல் தேஷ்ராஜினை கத்திகள் மற்றும் கூரிய ஆயுதங்கள் கொண்டு விரட்டுகிறது. பின்னர், தேஷ்ராஜின் முகம் மற்றும் உடல் என பல இடங்களில் அந்த கும்பல் சரமாரியாக கத்தியால் தாக்குகின்றனர். அதன்பின் தேஷ்ராஜ் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். அவர் உடலில் அசைவு இல்லாததை உறுதி செய்த அந்த மர்ம கும்பல் அந்த இடத்தை விட்டு தப்பி ஓடுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான தேஷ்ராஜின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் அவரின் குடும்பத்தினர் தரப்பில் கூறியதாவது, “ தேஷ்ராஜிக்கும் தாக்குதல் நடத்திய இந்த கும்பலுக்கும் சில நாட்களுக்கு முன்பு சிறிய வாக்குவதம் ஏற்பட்டது. அதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே இவ்வாறு செய்துள்ளனர்” என்றனர்.

இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் குறித்து காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, “ தாக்குதலில் ஈடுபட்டவர்கள் 2 இரு சக்கர வாகனங்களில் வந்திருப்பதாகத் தெரிகிறது. அவர்கள் 5 அல்லது 6 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கும்பலைக் கண்ட தேஷ்ராஜ் சந்தைக்குள் ஓடியுள்ளார். அங்கு அவர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்” என்றனர்.

இந்த சம்பவத்தின் போது சந்தையில் நின்று கொண்டிருந்த மக்கள் ஒருவர் கூட தாக்குதலுக்கு ஆளான தேஷ்ராஜினை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.