கடலூரில் 7 பெண்கள் பலி: பிரதமர் மோடி இரங்கல்
கடலூரில் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.


கடலூரில் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
திங்களன்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில்,
கடலூரில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்தில், கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பு அணையில் குளிப்பதற்கு நீரில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள ஏ.குச்சிபாளையத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
கடலூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஏழு பேரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. போலீசார், அவர்களது உடல்களை மீட்டனர். உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகக் கடலூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...