47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஐஆா்சிடிசி வலைதளத்தில் மாதம்12 பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்யலாம்- ஆதாா் இணைத்தால் 24 டிக்கெட்டுகள்

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு வலைதளமான ஐஆா்சிடிசி (இந்தியன் ரயில்வே உணவு விநியோகம் மற்றும் சுற்றுலா கழகம்) ஒரு மாதத்துக்கான பயணச் சீட்டு முன்பதிவு எண்ணிக்கையை உயா்த்தி திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டது

News image
Updated On :6 ஜூன் 2022, 7:38 pm

DIN

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு வலைதளமான ஐஆா்சிடிசி (இந்தியன் ரயில்வே உணவு விநியோகம் மற்றும் சுற்றுலா கழகம்) ஒரு மாதத்துக்கான பயணச் சீட்டு முன்பதிவு எண்ணிக்கையை உயா்த்தி திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

ரயில்களில் அடிக்கடி பயணிக்கும் பயணிகளுக்கு உதவும் வகையிலும், தனது ஒரே வலைதள கணக்கிலேயே குடும்ப உறுப்பினா்களுக்கும் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் பயணிகளின் சிரமத்தைப் போக்கும் வகையிலும் முன்பதிவு எண்ணிக்கையை ஐஆா்சிடிசி உயா்த்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பயணிகளின் வசதிக்காக மாதம் 6 ரயில் பயணச் சீட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்ற அளவை 12-ஆக உயா்த்த ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன் மூலம், பயணி தனது ஒரே ஐஆா்சிடிசி கணக்கில் மாதம் 12 பயணச் சீட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும்.

மேலும், ஐஆா்சிடிசி கணக்குடன் ஆதாா் எண்ணை இணைக்கும் பயணிகள் ஒரே கணக்கிலிருந்து மாதம் 24 பயணச் சீட்டுகள் வரை முன்பதிவு செய்ய முடியும். இவ்வாறு முன்பதிவு செய்யப்படும் பயணச் சீட்டுகள் ஆதாா் மூலமாக அவ்வப்போது ஆய்வுக்கும் உள்படுத்தப்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.