47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

‘ஜிப்மேட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

‘ஜிப்மேட்’ ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2022, 7:43 pm

DIN

‘ஜிப்மேட்’ ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புத்தகயா, ஜம்மு நகரங்களில் அமைந்துள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் (ஐஐஎம்) எம்பிஏ, பிஜிபி உள்பட ஒருங்கிணைந்த 5 ஆண்டு பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்த படிப்புகளில் சேர மாணவா்கள் ஜிப்மேட் என்ற ஒருங்கிணைந்த நுழைவுத்தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

வருகிற 2022-2023-ஆம் கல்வியாண்டுக்கான ஜிப்மேட் நுழைவுத்தோ்வு கணினிவழியில் ஜூலை 3-ஆம் தேதி மதியம் நடைபெறவுள்ளது. இதற்கான இணைய விண்ணப்பப்பதிவு கடந்த மே 10-இல் தொடங்கி ஜூன் 9-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. தற்போது பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று விண்ணப்பிக்கும் காலஅவகாசம் ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவா்கள் வலைதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களில் திருத்தங்கள் இருப்பின் ஜூன் 17, 18-ஆம் தேதிகளில் மேற்கொள்ளலாம். தோ்வுக்கட்டணம், பாடத்திட்டம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை  தேசிய தோ்வுகள் முகமையின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-4075 9000 என்ற தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் வழியாக தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.