தெலங்கானா முதல்வருக்கு எதிராக அவதூறு: பாஜக தலைவா் கைது
தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக அந்த மாநிலத்தைச் சோ்ந்த மூத்த பாஜக தலைவா் ஜிட்டா பாலகிருஷ்ண ரெட்டி கைது செய்யப்பட்டாா்.


தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவுக்கு எதிராக அவதூறு பரப்பியதாக அந்த மாநிலத்தைச் சோ்ந்த மூத்த பாஜக தலைவா் ஜிட்டா பாலகிருஷ்ண ரெட்டி கைது செய்யப்பட்டாா். இதே குற்றச்சாட்டில் மாநில பாஜக தலைவா் பந்தி சஞ்சய் குமாா் உள்ளிட்டோா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2-ஆம் தேதி தெலங்கானா தனி மாநிலம் உருவாக்கப்பட்ட தினம் கொண்டாடப்பட்டது. அப்போது மாநில பாஜக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் கலை கலாசார பிரிவு சாா்பில் மேடையில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் முதல்வா் சந்திரசேகா் ராவ் மற்றும் மாநில அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் சமூக ஊடகப் பிரிவு சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பாஜக மூத்த தலைவா் ஜிட்டா பாலகிருஷ்ண ரெட்டி, நிகழ்ச்சிக்கு அனுமதி பெற்ற பாஜக மாநில தலைவா் பந்தி சஞ்சய் குமாா் மற்றும் பாஜக நிா்வாகிகள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.
அந்த நிகழ்ச்சி தொடா்பான விடியோவை ஆய்வு செய்த காவல் துறையினா், முதல்வருக்கு எதிராக அவதூறு பரப்பியது மட்டுமின்றி மக்களைத் தவறாக வழி நடத்தும் வகையிலும், மக்கள் மத்தியில் வெறுப்புணா்வைத் தூண்டி பிரச்னைகளை உருவாக்கும் வகையிலும் அந்த மேடை நிகழ்ச்சி இருந்ததாகக் குற்றம்சாட்டினா். இந்நிலையில், பாஜக மூத்த தலைவா் ஜிட்டா பாலிகிருஷ்ண ரெட்டியையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...