
மகாராஷ்டிரத்தின் தாணே காவல் ஆணையரகத்தின் இணையதளம் செவ்வாய்க்கிழமை முடக்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில்,
இணையதளம் முடக்கம் குறித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களை நாங்கள் தொடர்பு கொண்டுள்ளோம். தாணே சைபர் குழு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
தாணே காவல் ஆணையரகத்தின் இணையதளம் திறக்கப்பட்டதும், "ஹலோ இந்திய அரசு அனைவருக்கும் வணக்கம். மீண்டும் மீண்டும் இஸ்லாமிய மதப் பிரச்னையில் தலையிட்டு பிரச்னை செய்கின்றனர்.
உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களிடம் விரைந்து மன்னிப்பு கேளுங்கள் எங்களை அவமதித்தால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்" என்ற செய்தியை வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.