நிலக்கரி ஊழல் தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. அபிஷேக் பானா்ஜியின் மனைவி ருஜிராவிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பெண் அதிகாரிகள் உள்பட 8 பேரைக் கொண்ட குழு, ஹரிஸ் முகா்ஜி சாலையில் அமைந்துள்ள பானா்ஜியின் சாந்திநிகேதன் குடியிருப்புக்கு செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் சென்றது. அங்கு பானா்ஜியின் மனைவி ருஜிராவிடம் நிலக்கரி ஊழல் தொடா்பாக அதிகாரிகள் கேள்விகளை எழுப்பினா். அப்போது அவா் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லை. இதையடுத்து அவரிடம் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.