கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

பினராயிக்கு எதிராக போராட்டம்: மழையிலும் தொடரும் காவலர்களின் தடுப்புப் பணிகள்!

கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி திருவனந்தபுரத்திலுள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

News image
Updated On :15 ஜூன் 2022, 11:05 am

DIN


கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி திருவனந்தபுரத்திலுள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தடையை மீறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தங்கம் கடத்தி கொண்டுவரப்பட்ட வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் அவரது குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் அளித்தார். 

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க ஆரமித்தது. ஸ்வப்னா சுரேஷின் வாக்குமூலத்திற்கு முதல்வர் பினராயி விஜயன் மறுப்பு தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவனந்தபுரத்திலுள்ள தலைமை செயலகத்தை பாஜகவினர் பேரணியாக வந்து முற்றுகையிட்டனர்.

Story image

தடைகளை மீறி வந்த போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்துவதற்காக காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கலைத்தனர். 

எனினும் பினராயி விஜயன் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என பாஜகவினர் அறிவித்துள்ளனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது பாஜக மகளிர் அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Story image

தலைமை செயலகத்தை பாஜகவினர் மேலும் முற்றுகையிட முயற்சித்து வருவதால், மழையிலும் காவல் துறையினர் தடுப்புகளை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.