

புது தில்லி: இந்திய கோதுமைக்கு ஐக்கிய அரபு அமீரகம் 4 மாதம் தடை விதித்துள்ளது.
இந்தியாவிலிருந்து வரும் கோதுமையை ஏற்றுமதி, மறு ஏற்றுமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தற்காலிக தடை விதித்துள்ளது. ஏற்றுமதி, மறு ஏற்றுமதிக்கு தடை விதிக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சரகம் உத்திரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: பெங்களூருவில் 31 பள்ளி மாணவர்களுக்கு கரோனா
அடுத்த 4 மாதங்களுக்கு இந்திய கோதுமைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சரகம் தடை விதித்துள்ளது. இந்தியாவின் கோதுமை, கோதுமை மாவை மறு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது.
சர்வதேச நிலவரங்களால் ஏற்பட்டுள்ள வர்த்தக சூழலை கருத்தில் கொண்டு நடவடிக்கை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.