பெங்களூருவில் 31 பள்ளி மாணவர்களுக்கு கரோனா

பெங்களூரில் பள்ளி மாணவர்களுக்கு 31 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெங்களூரில் பள்ளி மாணவர்களுக்கு 31 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரில் கரோனா எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை கர்நாடக சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. 

நியூ ஸ்டாண்டர்ட் ஆகிங்லப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் 21 மாணவர்களுக்கும், எம்இஎஸ் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் 10 மாணவர்களுக்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

தடுப்பூசியின் போது அறிகுறிகளுடன் தென்பட்ட மாணவர்களுக்கு கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்போது தொற்று இருப்பது தெரிய வந்தது. இரண்டு பள்ளிகளும் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன. 

பெங்களூருவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கவும், கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றவும் ப்ருஹத் பெங்களூரு மகாநகர பலிகே அறிவுறுத்தியுள்ளது. மேலும், கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கட்டாயம் தெர்மல் ஸ்கேனிங் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

திங்களன்று பெங்களூரில் 500க்கும் குறைவான கரோனா வழக்குகள் கண்டறியப்பட்டன. பாதிக்கப்பட்ட 3,738 பேரில் 28 பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 3 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 582 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை வரை மொத்தம் 17,960 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com