2023-ல் ஏர்பஸ் ஜெட் விமானம்: ஏர் இந்தியா புதிய திட்டம்

அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணிக்கூடிய வகையில், ஏர்பஸ் ஏ350 ஜெட் விமானப் பயணத்தை ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
2023-ல் ஏர்பஸ் ஜெட் விமானம்: ஏர் இந்தியா புதிய திட்டம்
Published on
Updated on
1 min read

அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணிக்கூடிய வகையில் ஏர்பஸ் ஏ350 ஜெட் விமானப் பயணத்தை ஏர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.

டாடா குழுமம் தன் விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவில் சில புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் முயற்சியில் இருப்பதால் தற்போது அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் உள்ள கேம்ப்பெல் வில்சன் முக்கியமான முடிவுகளை எடுத்து வருகிறார்.

அதன் பகுதியாக, வருகிற 2023 ஆண்டின் முதல் காலாண்டிற்குள் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் செல்லக்கூடிய வகையில் ஏர்பஸ் ஏ350 ஜெட் விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் துவங்க உள்ளது.

ஏர் இந்தியாவிடம் குறுகிய அளவிலான(narrow bodies) ஏர்பஸ் விமானங்கள் இருந்தாலும் புதிய திட்டமாக முதல்முறையாக இந்த ஏர்பஸ் ஏ350 ஜெட் விமான  சேவையை ஆரம்பிக்க உள்ளனர்.

இதற்காக, ஏர் இந்தியா  20 ஏ350 ஜெட் விமானத்தை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போதைய நிலவரப்படி ஏர் இந்தியாவிடம் 153 விமானங்கள் உள்ளன. அவற்றில் போயிங் தயாரித்த 49 பெரிய விமானங்களும், ஏர்பஸ் ஏ350 குறுகிய அளவிலான(narrow bodies) மற்றும் 25 போயிங் 737 விமானங்களும் அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com