டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தாய் பிறந்தநாள்: நேரில் ஆசி பெற்றார் பிரதமர் மோடி (விடியோ)

தாய் ஹீராபென் மோடி இன்று (சனிக்கிழமை) 100-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:42 am

DIN


தாய் ஹீராபென் மோடி இன்று (சனிக்கிழமை) 100-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் மோடி குஜராத் மாநிலம் காந்திநகரில் வசிக்கிறார். அவர் இன்று தனது 100-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இதை முன்னிட்டு காந்தி நகரிலுள்ள ஒரு சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படுவதாக காந்திநகர் மேயர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி தனது தாயைச் சந்திக்க காந்தி நகர் வீட்டிற்குச் சென்றார். தாயிடம் ஆசி பெற்ற பிரதமர், வீட்டில் விளக்கேற்றி, தாய்-க்கு பாத பூஜை செய்தார்.

Story image
Story image

தொடர்ந்து, அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, இருவரும் ஒருவருக்கொருவர் இனிப்புகளைப் பறிமாறிக்கொண்டனர்.

Story image

தாயுடன் சிறிது நேரம் செலவழித்த பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

இதன் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.