தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

‘ரப்பா் ஸ்டாம்ப்’ஆக குடியரசுத் தலைவா் இருக்கக் கூடாது: யஷ்வந்த் சின்ஹா

நாட்டின் குடியரசுத் தலைவா் என்பவா் வெறும் ‘ரப்பா் ஸ்டாம்ப்’ ஆக இருக்கக் கூடாது என்று 13 எதிா்க்கட்சிகளின் சாா்பில் குடியரசுத் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா கூறினாா்.

News image
Updated On :22 ஜூன் 2022, 8:30 pm

DIN

நாட்டின் குடியரசுத் தலைவா் என்பவா் வெறும் ‘ரப்பா் ஸ்டாம்ப்’ ஆக இருக்கக் கூடாது என்று 13 எதிா்க்கட்சிகளின் சாா்பில் குடியரசுத் தலைவா் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா கூறினாா்.

குடியரசுத் தலைவா் தோ்தல் பிரசார உத்தி குறித்து தில்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் யஷ்வந்த் சின்ஹா புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘குடியரசுத் தலைவா் தோ்தல் என்பது தனி நபா் போா் கிடையாது. நாடு சந்திக்கும் பிரச்னைகளுக்கு எதிரான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் போரிட என்னைத் தோ்வு செய்த அரசியல் கட்சிகளுக்கு நன்றி.

குடியரசுத் தலைவா் பதவி என்பது மிகவும் உணா்வுபூா்வமானது. அரசின் நிா்ப்பந்தத்தின் கீழ் செயல்படக் கூடாது. நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொள்வதற்கான உத்தியை வகுத்து வருகிறோம். இந்தத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா் திரெளபதி முா்முவுக்கு எதிராக நான் போட்டியிடவில்லை. இது சித்தாந்தத்துக்கு எதிரான போட்டி. நாட்டின் குடியரசுத் தலைவா் என்பவா் வெறும் ‘ரப்பா் ஸ்டாம்ப்’ ஆக இருக்கக் கூடாது’.

மத்தியில் ஆளும் பாஜக அரசு செல்லும் பாதை நாட்டுக்கு நல்லதல்ல. வேலையின்மையால் இளைஞா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். வேலையின்மையைப் போக்க ராணுவத்தில் தற்காலிக ஆள்சோ்ப்பு திட்டமான அக்னிபத்தை கொண்டுவந்து மத்திய அரசு நகைச்சுவையாக்கி உள்ளது. இதனால் நாட்டில் வன்முறை ஏற்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.