37 ஆண்டுகளுக்குப் பிறகு பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 37 ஆண்டுகளுக்குப் பிறகு பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 37 ஆண்டுகளுக்குப் பிறகு பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

5 நாட்களுக்கு முன்பு லிங்க்ட் இன் பக்கத்தில் அந்த பெண்ணின் மகன் பிரசாத் ஜம்பாலே பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “ 16 வயதில் எனது அம்மா  அவரது தந்தை இறந்ததால் பள்ளிப் படிப்பை கைவிட வேண்டிய சூழல் உருவானது. கடந்த ஆண்டு ஒரு சிறு வேலையாக அரசாங்கப்  பள்ளிக்கு அவர் சென்றுள்ளார். அப்போது அந்தப் பள்ளியில் இருந்த ஆசிரியர் எனது தாயார் என்ன படித்திருக்கிறார் எனக் கேட்டுள்ளார். மேலும், பள்ளிப் படிப்பைத் தொடர முடியாமல் கைவிட்டவர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் உள்ள திட்டம் குறித்தும் தெரிவித்துள்ளார். அதன்படி ஒருவர் மீண்டும் பள்ளிப் படிப்பைத் தொடரலாம். அவர்களுக்கான புத்தகங்கள், இணையதள பயிற்சி மற்றும் வழிகாட்டு முறைகளை அரசு வழங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.” என்றார்.

லிங்க்ட் இன் விவரங்களின் மூலம் அவர் ஒரு மென்பொருள் பொறியாளர் என்பது தெரிகிறது. அவரது தாயார் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மீண்டும் பள்ளிக்குச் செல்ல முடிவு செய்துள்ளார். மகன் அயர்லாந்தில் இருப்பதால் தனது தாயார் பள்ளிக்குச் செல்வது குறித்து அவருக்குத் தெரியவில்லை. அதேபோல மகாராஷ்டிரத்தில் உள்ள அவரது மற்றொரு மகனுக்கும் தனது தாய் மீண்டும் பள்ளிக்குச் செல்வது ஆரம்பத்தில் தெரியவில்லை. 

இது தொடர்பாக தனது லிங்க்ட் இன் பதிவில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: “ நான் அயர்லாந்தில் இருந்து இந்தியாவில் இருக்கும் எனது குடும்பத்தினருக்கு இரவில் அழைத்துப் பேசுவேன். அப்போது, அம்மா எங்கே எனக் கேட்டால் அவர் நடைபயிற்சிக்கு சென்றிருக்கிறார் எனக் கூறுவார்கள். இது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்போது அவர் படித்துக் கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர் பள்ளிப் படிப்பை மீண்டும் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெரிந்ததும் ஆச்சர்யமடைந்தேன். அவர் ஆங்கிலத்திலும், கணக்கிலும் சிறப்பாக செயல்படுகிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவரது படிப்பின் மீதான ஆர்வத்தை புரிந்து கொள்ள முடிகிறது.” என்றார்.

தனது மகனின் திருமணம் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்தது. அதற்கு அடுத்த மாதமே பொதுத் தேர்வு எழுதி அவர் வெற்றி பெற்றுள்ளார். தேர்வில் வெற்றி பெற்றது  மட்டுமில்லாமல் 79.6 சதவிகித மதிப்பெண்கள் பெற்று அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com