மகாராஷ்டிரத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், அக்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடந்துவருகிறது.
சமீபத்தில் நடந்த சட்டமேலவைத் தேர்தலையடுத்து, சிவசேனை கட்சியின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ளதால் அங்கு அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.
ஆளும் கூட்டணியின் பலம் குறைந்துள்ளதாலும் பாஜகவின் பலம் அதிகரிக்கும் சூழ்நிலையிலும் பதவியை ராஜிநாமா செய்யத் தயார் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
இதனிடையே, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணியிலிருந்து சிவசேனை வெளியேற வேண்டுமென சிவசேனையை சேர்ந்த மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே வலியுறுத்தியுள்ளார். இதனால் மீண்டும் பாஜகவுடன் சிவசேனை கூட்டணி சேருமா என்ற ஐயம் எழுகிறது.
இந்த சூழ்நிலையில்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், அக்கட்சித் தலைவர்களுடன் தில்லியில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க | சட்டப்பேரவை கலைப்பா? பாஜக ஆட்சியா? மகாராஷ்டிரத்தில் தொடரும் குழப்பம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


