ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 50யைக் கடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரத்தில் சிவசேனை - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இணைந்த 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் சிவசேனை சட்டப்பேரவைக் குழுத் தலைவரும் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே முதலில் அமைச்சருடன் 10 எம்எல்ஏக்கள் 'காணாமல் போனதாக'க் கூறப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை நிலவரப்படி ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக 42 எம்எல்ஏக்கள் உள்ளதாகவும் அதில் 34 பேர் சிவசேனைக் கட்சியினர் என்றும் 8 பேர் சுயட்சை எம்எல்ஏக்கள் என்றும் தகவல் வெளியானது.
இதையும் படிக்க: மகாராஷ்டிரம்: தொடா்கிறது நெருக்கடி
அதை உறுதிப்படுத்தும் விதமாக, ஏக்நாத் ஷிண்டே எம்எல்ஏக்களுடன் இருக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில், இன்று ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 50யைக் கடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து ஏக்நாத்தின் ஆதரவாளர்கள் அதிகரித்து வருவதால் மகாராஷ்டிர அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய ராசி பலன் (25.06.2026) - கன்னி
இன்றைய ராசி பலன் (25.06.2026) - சிம்மம்
இன்றைய ராசி பலன் (25.06.2026) - கடகம்

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.65! 11 காசுகள் உயர்வு!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



