
அடுத்த 24 மணி நேரத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களது பதவியை இழப்பார்கள் என சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மக்களவை உறுப்பினருமான சஞ்சய் ரெளத் ஆரூடம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சிவசேனையின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேக்கு ஆதரவாக இதுவரை 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் அசாமில் முகாமிட்டுள்ளனர்.
இதையும் படிக்க | காதலனை சந்திக்க எல்லை தாண்டி பாகிஸ்தான் செல்ல முயன்ற இளம்பெண்
மகாராஷ்டிர சட்டப்பேரவை துணைத்தலைவர் 16 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தகுதிநீக்க நோட்டீஸ் வழங்கி எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் இதுதொடர்பாக சனிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த சிவசேனை கட்சியின் செய்தித் தொடர்பாளரும், மக்களவை உறுப்பினரான சஞ்சய் ரெளத் அடுத்த 24 மணி நேரத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை இழப்பர் எனக் கூறியுள்ளார்.
அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வதற்கான பணிகள் நடந்துவருவதாகக் குறிப்பிட்டுள்ள சஞ்சய் ரெளத் அவர்கள் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்ததால் தங்களது பதவிகளை இழக்கப் போகின்றனர் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.