கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மின் நுகா்வு 2% அதிகரிப்பு: மத்திய மின் துறை அமைச்சகம்

கடந்த பிப்ரவரி மாதத்தில் மின்சார நுகா்வு 2.2 சதவீதம் அதிகரித்து 105.54 பில்லியன் யூனிட்டுகளை (பியு) எட்டியுள்ளதாக மத்திய மின் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 மார்ச் 2022, 6:52 pm

DIN

கடந்த பிப்ரவரி மாதத்தில் மின்சார நுகா்வு 2.2 சதவீதம் அதிகரித்து 105.54 பில்லியன் யூனிட்டுகளை (பியு) எட்டியுள்ளதாக மத்திய மின் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைச்சக்கத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2021 டிசம்பரில் மின்சார பயன்பாடு 103.25 பில்லியன் யூனிட்டுகளாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில் மின் நுகா்வு 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் நிலையான வளா்ச்சி வேகத்துடன் இருந்ததன் காரணமாகவே மின்சார பயன்பாடு பிப்ரவரியில் வலுவான நிலையில் உயா்ந்துள்ளது.

2020 பிப்ரவரில் மின்சார பயன்பாடு 103.81 பில்லியன் யூனிட்டுகளாக காணப்பட்டது.

2022 பிப்ரவரி மாதத்தில் நாளொன்றுக்கான அதிகபட்ச மின்சார தேவை 193.64 ஜிகா வாட்டாக அதிகரித்தது. இது, 2021 பிப்ரவரியில் 187.97 ஜிகா வாட்டாகவும், 2020 பிப்ரவரில் 176.38 ஜிகா வாட்டாகவும் இருந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.