சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

இந்தியர்களை மீட்க விமானப் படை விமானங்கள்

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை சி - 17 ரக விமானப் படை விமானத்தைப் பயன்படுத்தி பத்திரமாக மீட்டுக் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

News image
Updated On :1 மார்ச் 2022, 9:31 pm

 நமது நிருபர்

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை சி - 17 ரக விமானப் படை விமானத்தைப் பயன்படுத்தி பத்திரமாக மீட்டுக் கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர "ஆபரேஷன் கங்கா' என்கிற பெயரில் மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 
இந்தப் பணிகளில் தற்போது வரை ஏர் இந்தியா உள்ளிட்ட தனியார் விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், விமானப் படைக்குச் சொந்தமான சி-17 ரக போயிங் விமானங்களையும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்த விமானப் படையிடம் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ரக விமானத்தில் சுமார் 336 பேர் வரை பயணம் செய்ய முடியும். அண்மையில் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்கு இந்த விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
தற்போது உக்ரைனில் மாணவர்கள் உள்பட சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளனர். அவர்களை குறுகிய காலத்தில் அதிக அளவில் மீட்க இந்த சி-17 ரக விமானங்களையும் "ஆபரேஷன் கங்கா' திட்டத்தில் சேர்க்க பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. 
சி-17 ரக விமானம் ருமேனியாவுக்கு புதன்கிழமை (மார்ச் 2) புறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.