ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

உக்ரைன் விவகாரம்: குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

உக்ரைன் போர்  தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை இன்று சந்தித்தார்.

News image
Updated On :1 மார்ச் 2022, 5:52 am

DIN

உக்ரைன் போர்  தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை இன்று சந்தித்தார்.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக ஏற்கெனவே 3 முறை ஆலோசனை நடைபெற்றது. அதன் விளைவாக உக்ரைன் எல்லைகளில் 24 மணிநேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டன. 

தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் உக்ரைனுக்கு நிவாரணப் பொருள்கள் அனுப்புவதும் குறித்தும் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்பாகவும் போரில் யாருக்கு ஆதரவு நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நேற்று பிப்ரவரி 28 (இரவு 7 மணி) நிலவரப்படி இதுவரை உக்ரைனில் இருந்து 1,156 பயணிகளை ஏற்றிக்கொண்டு 5 விமானங்கள் (மும்பையில் ஒன்று, தில்லியில் நான்கு) வந்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.